யாழ்.புன்னாலைக்கட்டுவன் - அச்சுவேலி வீதியில் கத்திமுனையில் இளைஞனை அச்சுறுத்தி வழிப்பறி கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.புன்னாலைக்கட்டுவன் - அச்சுவேலி வீதியில் கத்திமுனையில் இளைஞனை அச்சுறுத்தி வழிப்பறி கொள்ளை..!

யாழ்.புன்னாலைக்கட்டுவன் - அச்சுவேலி வீதி ஊடாக பயணித்த 29 வயதான இளைஞனை கத்திமுனையில் அச்சுறுத்திய வழிப்பறி கும்பல் பெறுமதியான தொலைபேசி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றிருக்கின்றது. 

கடந்த 12ம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

இரவு 10 மணியளவில் புன்னாலைக்கட்டுவனில் இருந்து அச்சுவேலி செல்லும் வீதி ஊடாக இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது இடையில் மோட்டார் சைக்கிளை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. 

இந்நிலையில் இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதை தொடர்ந்து இளைஞனை கத்திமுனையில் அச்சுறுத்திய குறித்த நபர்கள் பெறுமதியான தொலைபேசி மற்றும் பாண் விற்பனை செய்த 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞன் கூறுகையில், தகராறு காரணமாக யாரையோ தேடுபவர்கள்போல் பாவனை செய்தே மோட்டார் சைக்கிளை மறித்தார்கள். அதனால் எனக்கு எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால் பின்பே அவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள் என தொிந்தது.

அவர்கள் வாள்களையும் வைத்திருந்தார்கள் என கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு