SuperTopAds

பணத்தாள்களை விட ஏ.டி.எம் அட்டையில் அதிக நேரம் உயிர் வாழும் கொரோனா வைரஸ்!! -ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

ஆசிரியர் - Editor II
பணத்தாள்களை விட ஏ.டி.எம் அட்டையில் அதிக நேரம் உயிர் வாழும் கொரோனா வைரஸ்!! -ஆய்வில் அதிர்ச்சி தகவல்-

பணத் தாள்களுடன் ஒப்பிடும் போது வங்கிகளின் ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டுகளில் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் பல்வேறு பொருட்களில் பல மணிநேரம் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.

காகிதம், பிளாஸ்டிக், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் படர்ந்து இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களிடம் அதிகமாக இருக்கும் பணத் தாள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனால் பணத் தாள்களின் பயன்பாடு குறைத்து வங்கிகளின் ஏ.டி.எம் மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பணத்தாள்களுடன் ஒப்பிடும் போது வங்கிகளின் ஏ.டி.எம். கிரெடிட் கார்டுகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

பணத்தாள்கள்கள் மற்றும் நாணயங்களில் வைரசை பரவவிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 30 நிமிடம், 4 மணி நேரம், 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேரம் ஆகிய 4 வகையான நேரங்களில் சோதனை செய்யப்பட்டது. 

இதில் 30 நிமிடங்களுக்கு பின் பணத்தாள்களில் வைரஸ்களை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. 

அதே போன்று ஏ.டி.எம். மற்றும் கிரெடிட்கார்டுகளில் கொரோனா வைரசை பரவவிட்ட அதே போன்ற சோதனை நடத்தப்பட்டது. இதன் போது ஏ.டி.எம். மற்றும் கிரெடிட்கார்டுகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.