SuperTopAds

பிரதமர் ரணில் - சுமந்திரன் இடையே தொலைபேசியில் பேச்சு..! புதிய சட்ட மறுசீரமைப்பு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்கிறார் எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
பிரதமர் ரணில் - சுமந்திரன் இடையே தொலைபேசியில் பேச்சு..! புதிய சட்ட மறுசீரமைப்பு குழுவின் தலைமை பொறுப்பை ஏற்கிறார் எம்.ஏ.சுமந்திரன்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றின் கீழ் புதிதாக உருவாக்கவுள்ள சட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு தலைமை தாங்குவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இணக்கம் தொிவித்துள்ளார். 

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொிவித்துள்ளதாவது, நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் ஸ்திரமான அரசாங்கம் இன்றியமையாததாகும். 

எனவே தற்போதைய அரசாங்கத்தின் சரியான செயற்பாடுகளை நாம் ஆதரிப்போம். தமிழ்மக்கள் சார்ந்த அரசியலைப்புத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென தொலைபேசி ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனிடம் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படவுள்ள சட்ட மறுசீரமைப்புக் குழு நிறைவேற்றுத்துறை சார்ந்தது அல்ல என்பதாலும் தமிழ்மக்கள் சார்ந்த அரசியலைப்புத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென 

பிரதமர் என்னிடம் கோரிக்கை விடுத்ததாலுமே நான் இதற்கு சம்மதித்தேன் என சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.