ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு கடும் அதிருப்தி..!
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமையின் மூலம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். அதில் மேலும் அவர் கூறுகையில்,
ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார், மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றம் விரைவில் முடிவை காண்பிக்கும்,
ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற தெரிவில் சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லை. அவர் தனது தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை என்றார்.