அரபிக் குத்து பாணியில் உருவாகும் 'தளபதி 66' பட பாடல்

ஆசிரியர் - Editor II
அரபிக் குத்து பாணியில் உருவாகும் 'தளபதி 66' பட பாடல்

அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'தளபதி 66' படத்தின் பாடல் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு  ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்மையில் ஐதராபாத் சென்ற தளபதி விஜய் பிசியாக நடித்து வருகிறார். 

அண்மையில் இப்படத்தில் நடிகர் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, நடிகை சங்கீதா, பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, ஜெயசுதா ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 'தளபதி 66' படத்தில் 6 பாடல்கள் இடம் பெறுகிறது என்றும் அதில் ஒரு பாடல் அரபிக் குத்து பாடல் பாணியில் தளபதி விஜய்யின் நடனத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு