முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையுடன் இணைந்து நடத்த பல்கலைக்கழக மாணவர்கள் இணக்கம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபையுடன் இணைந்து நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணக்கம் தெரிவித்திருப்பதுடன், இந்த ஆண்டு நினைவேந்தல் பேரெழுச்சியுடன் நடைபெறும் என ஒன்றிணைந்து கூறியுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுடைய நினைவேந்தல் மே-18ம் தி கதி நினைவுகூரப்படுகின்றது. இந்நிலையில் வடமாகாணசபை கடந்த 3 வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்திவந்தது. இந்த ஆண்டு அந்த நினைவேந்தல்
நடாத்தும் பொறுப்பை தங்களிடம் வழங்கவேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சமூகம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் அதனை வடமாகாணசபை ஆரம்பத்தில் நிராகரித்தது. இதனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பல்கலைக்கழக மாணவர்கள் தனித்து நடாத்தும் தீர்மானத்தை எடுத்திருந்தனர்.
இந்நிலையில் பொது அமைப்புக்கள் சில பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்தவேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், பல்கலைக்கழக மாணவர்களுடன் பேச்சு வார்த்தையும் நடாத்தியிருந்தார்கள்.
இதற்கமைய இன்றைய தினம் மாலை 5 மணிக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சுமார் 3 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வடமாகாணசபைக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்குமி டையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது. முதலமைச்சருடான இந்தப் பேச்சுவார்த்தை குறித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிஸ்ணமேனன் கருத்து கூறும்போது,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக இன்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் நீண்டநேரம் பேச்சுவா ர்த்தை நடத்தியிருக்கிறோம். பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் சாதகமாக எடுத்துக் கொண்டார்.
மாணவர்களின் கோரிக்கையை 100வீதம் சாதகமாக பரிசீலிப்பதாக கூறினார். முதலமைச்சருடனான சந்திப்பின் ஊடாக எமக்கு புதிய நம்பிக்கை பிறந்திருக்கின்றது. இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரெழுச்சியுட ன் உலகத்திற்கு ஒரு செய்தியை சொல்வதாக நிச்சயம் அமையும்.
இதனை எந்த சக்தியாலும் குழப்ப இயலாது. மேலும் நாளை முள்ளிவாய்காலில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி தீர்மானங்களை எடுப்போம் என்றார்.