கோவில் வளாகத்தை சுற்றி மதில் கட்டியது தவறாம்..! கோவிலுக்குள் புகுந்து வன்முறை குழு அட்டகாசம், குருக்கல் உட்பட 4 பேர் படுகாயம்...
ஆலயத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் குருக்கல் மீதும், கட்டுமான பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில், குருக்கல் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்துார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவும், நேற்று வெள்ளிக்கிழமை பகலும் இரு தடவைகள் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
குறித்த ஆலயக் காணியின் கடற்கரைப் பகுதியில் இரவில் இளைஞர் குழு ஒன்று போதைவஸ்து பாவித்து வருவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனடிப்படையில் ஆலயத்தினரை தொடர்பு கொண்டிருந்த பொலிசார், உங்கள் ஆலயத்தின் கடற்கரை எல்லைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று போதைவஸ்து பாவித்துவருவதாகவும் அவர்களுடன் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள் எனவும்
எனவே உங்கள் எல்லை வேலியை அமைக்குமாறும் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நிர்வாகம் ஆலயத்தை சுற்றி மதில் அமைத்து வருகின்றனர்.
இதன் போது குறித்த இளைஞர் குழுவினர் தொடர்ந்து மதில் அமைப்பதற்கு இடையூறு விளைவித்து வந்ததுடன் கட்டிய மதிலின் ஒரு பகுதியை உடைத்துள்ளனர்.
இந்நிலையில் கோவில் கோபுரம் அமைத்துவரும் வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆச்சாரியர்கள் இருவர் சம்பவ தினமான வியாழக்கிழமை இரவு தமது வேலைகளை முடித்துவிட்டு மின்சார தடை ஏற்பட்ட நேரத்தில்
கோவிலின் கடற்கரைப் பகுதியில் அமர்ந்து இருந்தபோது அங்கு திடீரென வந்த குறித்த இளைஞர்குழுவினர் அவர்கள் மீது பொல்லுகளால் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,
மறுநாள் நேற்று வெள்ளிக்கிழமை கோவிலுக்குள் புகுந்த வன்முறை கும்பல் குருக்கல் மீதும், தொண்டு செய்யும் இளைஞன் மீதும் தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.