SuperTopAds

விண்வெளியில் இன்னுமொரு பூமி!! -சனி கிரகத்தில் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்-

ஆசிரியர் - Editor II
விண்வெளியில் இன்னுமொரு பூமி!! -சனி கிரகத்தில் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்-

சூரிய குடும்பத்தில் சனி கிரகம் அருகே பூமியை போல தோற்றமளிக்கும் இன்னொரு கிரகத்தை அமெரிக்கா நாட்டின் ஸ்டான்போர்டு பல்கலை விஞ்ஞானி மேத்யூ வபோட்ரா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

சூரியனில் இருந்து ஆறாவதாக சனி கோள் உள்ளது. சூரியன் - சனி இடையிலான தூரம் 147 கோடி கி.மீ. பூமிக்கு ஒரு நிலவு இருப்பது போல சனி கிரகத்துக்கு 82 நிலவுகள் உள்ளன. 

இதனால் சனி கிரகமும் ஒரு சிறிய சூரியகுடும்பம் போல உள்ளது. இந்த 82 நிலவுகளில் மிகப்பெரியதான 'டைட்டன்' நிலவு இன்னொரு பூமியை போல உள்ளது என கண்டறிந்துள்ளனர். டைட்டன் நிலவில் ஆறு குளங்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலை உள்பட பூமியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இருப்பதால் இதை 'பூமி 2.0' என்றும் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.