அழுத்தங்களுக்கு அடிபணிவதா? அப்படி ஒன்று நடக்கவே நடக்காது, பிரதமர் மஹிந்த காட்டமாம்..

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகும் தீர்மானமே தம்மிடம் இல்லை. என கூறியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் எனவும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் , முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.