43 வருடங்களின் பின் வடக்கிற்கு தங்கப்பதக்கம்!! -வென்று கொடுத்த காண்டீபனுக்கு அரியாலையில் கௌரவிப்பு-
வடமாகாணத்திற்கு 43 வருடங்களின் பின்னர் தேசிய மட்ட தங்கப்பதக்கம் வென்று கொடுத்த சாதனையாளர் சற்குணம் காண்டீபனை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
கோடைகால நாடு தழுவிய பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்தி 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் வடமாகாணம் சார்பில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த சற்குணம் காண்டீபன் தேசிய மட்டத்தில் தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்தார்.
அவர் பெற்றுக் கொடுத்து அந்த தங்கப்பதக்கம் 43 வருடங்களின் பின்னர் வடமாகாணம் சார்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட தங்கபதக்கமாகும்.
யாழ்.மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இக் கௌரவிப்பு நிகழ்வில் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் பொலிஸ் அத்தியட்சகர் நயணப்பிரிய, யாழ்.மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விஜிதரன், அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய செயலாளர் நி.காவிந்தன், யாழ். மாவட்ட பூப்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சாதனையாளர் சற்குணம் காண்டீபனுக்கான கௌரவத்தை வழங்கியிருந்தனர்.