ஒன்றரை மாத குழந்தையுடன் மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்..!

ஆசிரியர் - Editor I
ஒன்றரை மாத குழந்தையுடன் மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்..!

ஒன்றரை மாத குழந்தையுடன் 5 பேர் கொண்ட குடும்பம் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தமிழக செய்திகள் தொிவிக்கின்றன. 

இராமேஸ்வரம் - சேராங்கோட்டை கடற்கரை ஊடாக தமிழகத்திற்குள் வந்த இவர்களை பொலிஸார் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதாகவும், தொழில்களை இழந்து, 

வாழ்வாதரம் இன்றி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டமையாலேயே தாம் தமிழகம் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 80 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு