இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் 2.5 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு..!

ஆசிரியர் - Editor I
இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் 2.5 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு..!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 130 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி இலங்கை மதிப்பில் 2.5 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொதிகள் ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு