ஊடகங்கள் நான் கூறுவதை திரிபுபடுத்தி வெளியிடுகின்றன.. சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு.
“யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் செயற்படுவது குறித்து மனவருத்தமளிக்கிறது என்பதை மட்டுமே என்னால் கூறமுடியும். வேறு வகையில் நான் ஒன்றைத் தெரிவிக்க பத்திரிகைகள் வேறு கருத்துப்பட செய்தியை வெளியிடுகின்றன”
இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மே - 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடந்த 3 ஆண்டுகள் நடத்தப்படமை போன்று வடக்கு மாகாண சபை நடத்த திட்டமிட்டது. எனினும் அதனை தலைமை ஏற்று நடத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விருப்பம் தெரிவித்தது - அதற்கான ஒழுங்குகளையும் செய்தது. எனினும் வடக்கு மாகாண சபையே நிகழ்வை முன்னெடுக்கும் பல்கலைக்கழக மாணவர்களையும் தங்களோடு இணையுமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். எனினும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அதனை நிராகரித்தது.
இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு தமக்கு வருத்தமளிப்பதாகவும் அவர்கள் யாரோ ஒரு தரப்பின் பின்னணியில் செயற்படுவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முதலமைச்சரின் அந்தக் கருத்தை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று, மாணவர்களின் பின்னணியில் பணம் உள்ளது என கூறியதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அதுதொடர்பில் கருத்து வெளியிட்ட போதே முதலமைச்சர் மேற்கண்ட கருத்தத்தைத் தெரிவித்தார்.