SuperTopAds

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கவே இல்லையாம்..! மைத்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு..

ஆசிரியர் - Editor I
புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கவே இல்லையாம்..! மைத்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு..

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தொிவித்தார். என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்வைத்த கருத்தை பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகள் நிராகரித்துள்ளதுடன், அவ்வாறான ஒரு கருத்தை ஜனாதிபதி கூறவில்லை எனவும் கூறியுள்ளனர். 

மேற்படி விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த அதிகாரிகள் கருத்து தொிவித்திருக்கின்றனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது, 

குறுகியகாலத்திற்கு புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார். என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார், எனினும் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கம் குறித்து ஆராயப்பட்டது என தெரிவித்துள்ள சிரேஸ்ட அதிகாரியொருவர் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அதன் யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார், 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென்றால் அவர்கள் தாங்கள் நியமிக்க நினைக்கின்றவரை பிரதமராக நியமிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமித்ததும் அது குறித்து ஆராயலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் ஜனாதிபதி புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளார். 

என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.