பிரதமரை பதவி விலக்கி புதிய பிரதமர், புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்...! தேசிய அரசியலில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
பிரதமரை பதவி விலக்கி புதிய பிரதமர், புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி இணக்கம்...! தேசிய அரசியலில் பரபரப்பு..

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் தொிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா கூறியள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஏப்ரல் 29) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக கூறியிருக்கும் மைத்திரிபால சிறிசேனா, சந்திப்பு தொடர்பாக கூறும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

நாட்டை நிர்வகிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று காலை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதையடுத்து இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு