யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அமொிக்க துாதரக வாகனம் மோதியதில் 19 வயது இளைஞன் படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அமொிக்க துாதரக வாகனம் மோதியதில் 19 வயது இளைஞன் படுகாயம்..!

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இன்று அமொிக்க துாதரக வாகனம் மோதியதில் 19 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மூன்று சொகுசு வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நகர் பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி 

பிரதான வீதியிலிருந்து இடது கரைக்கு துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்திற்குள்ளான சொகுசு வாகனத்தில் அமெரிக்க துாதரகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பயணம் செய்ததாக தெரியவருகிறது.

குறித்த விபத்தில் திவாகர் (வயது -19) கூமாங்குளத்தை சேர்ந்த இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 

விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனம் காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio