வடக்கிலும் கூவுகிறது தொண்டாவின் சேவல்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வடக்கிலும் தனித்து, சொந்தச் சின்னமான சேவல் சின்னத்தில் போட்டிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவை நகர சபையிலும், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களிலுமே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது.
இந்த உள்ளூராட்சி மன்றங்களில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூடன் இணைந்து, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸூம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.