காதல் மனைவியை கர்ப்பம் ஆக்க கைதிக்கு 15 நாள் பிணை!! -நீதிமன்றத்திற்கு வந்த விசித்திர மனு-
ராஜஸ்தானில் சிறைக் கைதியாக உள்ளவர் ஒருவருக்கு, அவரது மனைவியை கர்ப்பம் தரிக்க வைப்பதற்காக வீட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அனுமதியாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அவரை 15 நாட்கள் பிணையில் விடுவித்து காதலியுடன் வீட்டில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் விசித்திரமான மனு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ராஜஸ்தானில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 43 வயதான ஒருவருக்;கு பில்வாரா நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் அஜ்மீர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது மனைவி ரேகா ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் தாக்கல் செய்த மனுவில், குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ளதாகவும், இதனடிப்படையில் தனது கணவரை விடுவிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார்.
மனு விசாரணையின்போது, குறித்த கைதியின் மனைவி நிரபராதி என்றும், அந்த ஆணின் சிறை தண்டனையால் திருமண வாழ்க்கையுடன் தொடர்புடைய அவரது பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் தண்டனை கைதியின் மனைவி, சந்ததியைப் பெறுவதற்கான உரிமையைப் பறிக்க முடியாது. எனவே, மனைவி கர்ப்பம் தரிக்க நந்த் லாலுக்கு 15 நாட்கள் பிணை வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.