SuperTopAds

13 வயது சிறுமி வன்புணர்வு விவகாரம்- கைதான இரு சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

ஆசிரியர் - Editor III
13 வயது சிறுமி வன்புணர்வு விவகாரம்- கைதான இரு சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல்

13 வயது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தி  வீடியோ ஒன்றினை காட்டி 10 இலட்சம் ரூபா கப்பம் கேட்டு நீண்டகாலமாக  மிரட்டி வந்த  இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

 அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 13 வயதான தனது மகளை 3 சந்தேக நபர்கள் வீடியோ காணொளி ஒன்றினை முன்வைத்து கப்பம் கேட்பதாக கடந்த 2022.01.05 அன்று சிறுமியின் தாயாரினால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பொலிஸார்   தலைமறைவாக இருந்த  3 சந்தேக நபர்களையும் அடையாளம் கண்ட நிலையில்  தேடுதல் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை(18) அன்று   கப்பம் கோரிய சந்தேக நபரான  மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை  சேர்ந்த 33 வயதுடையவரை  கல்முனை பகுதி உணவகமொன்றில் வைத்து கைது செய்தனர்.அதன் பின்னர் கைதானவரின் தகவலுக்கமைய இச்சம்பவத்திற்கு  உடந்தையான  செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபரான சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த  31 வயதுடையவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதான  இரு சந்தேக நபர்களையும்  பொலிஸ் விசேட பிரிவின் தகவலுக்கமைய கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமை குழுவினர்  கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொள்ள பட்ட நிலையில் இன்று(19) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் மே 2 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான   சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபர்  டுபாய் நாட்டிற்கு  தப்பி சென்ற நிலையில் அவரை கைது செய்ய    பிடியாணை உத்தரவினை பெறுவதற்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.