சூப்பஸ்டார் படத்தின் சாதனையை முறியடித்த கே.ஜி.எப்-2

ஆசிரியர் - Editor II
சூப்பஸ்டார் படத்தின் சாதனையை முறியடித்த கே.ஜி.எப்-2

உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் யஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள கே.ஜி.எப் 2 படம் ரஜினி படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் திகதி இப்படம் வெளியாகியிருந்தது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் கே.ஜி.எப்-2 இந்தியா முழுவதும் முதல் நாள் 134.5 கோடியும் இரண்டாம் நாள் 240 கோடியும் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

பொதுவாக ஒரு மொழியில் வெளியாகும் படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியடப்படுகிறது. அந்த வகையில் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்படும் பிறமொழி படங்களில் தமிழ் படங்களே அதிக வசூலை அள்ளியுள்ளது. குறிப்பாக சூப்பஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 மற்றும் எந்திரன் ஆகிய படங்கள் 50 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கே.ஜி.எப்-2 திரைப்படம் இதனை முறியடித்துள்ளது. இப்படம் வெளியான 4 நாட்களில் தெலுங்கில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து, சூபஸ்டார் ரஜினி படம் செய்த சாதனையை தற்போது முறியடித்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு