SuperTopAds

நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட அறிக்கை ஒன்றை வழங்குகிறார் ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ...!

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட அறிக்கை ஒன்றை வழங்குகிறார் ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ...!

புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்‌ஷ இன்று இரவு விசேட அறிக்கை ஒன்றை நாட்டு மக்களுக்கு வழங்கவுள்ளார்.

ஜனாதிபதியின் அறிக்கை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி சனல்களிலும் இரவு 07.30 மணிக்கு ஒளிபரப்பப்படும். 

புதிய அமைச்சரவையை நியமித்த போதிலும், நான்கு அரசாங்க உயர் பதவிகள் மாறாமல் இருக்கும் என்று PMD மேலும் கூறினார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இருந்த அமைச்சுக்கள் மாற்றமில்லாமல் இருக்கும் அதேவேளை மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தனது கடமைகளை தொடர்வார். 

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நீடிப்பார் என்றும் அலி சப்ரி நிதி அமைச்சராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.