ஹயஸ் வாகனத்தை கடத்தி அடுத்தடுத்து பல விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நபர், துரத்தி பிடித்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படை..! 4 பேர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
ஹயஸ் வாகனத்தை கடத்தி அடுத்தடுத்து பல விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நபர், துரத்தி பிடித்த பொலிஸ் மற்றும் அதிரடிப்படை..! 4 பேர் படுகாயம்...

ஹயஸ் வாகனத்தை கடத்தியதுடன், 3க்கும் மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பி ஓடிய நபரை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துரத்தி பிடித்துள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். 

நேற்று மாலை 5.45 மணியளிவல் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, அக்கராயன் குளத்திலிருந்து ஹயஸ் வாகனம் ஒன்றை கடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதன்போது வவவுனியா பேருந்து நிலையம் முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்களை மோதி தள்ளியுள்ளது. 

பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இரு ஆட்டோக்களை மோதி தள்ளிய வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதுடன் வவுனியா நகருக்குள் மேலம் ஒரு ஆட்டோவையும், மற்றொரு ஹயஸ் வாகனத்தையும் மோதிவிட்டு தப்பி ஓடிய நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை துரத்திச் சென்று அனுராதபுரம் - ஹொறவப்பொத்தானை பகுதியில் வைத்து வாகனத்தை கைப்பற்றியதுடன் அதனை கடத்திவந்த நபரையும் கைது செய்தனர். 

சம்பவத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த 5 வரையான வாகனங்கள் சேதமாக்கப்பட்டதுடன், 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு