நடிகையை கடத்தி பாலியல் வன்புணர்வு!! -நடிகரிடம் இருந்த 11 ஆயிரம் வீடியோக்கள் பறிமுதல்-
நடிகர் தீலிப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஒன்றிணைந்து திட்டமிட்டு நடிகையை பழிவாங்குவதற்கு நடத்திய பாலியல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீபின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளமையை வெளிப்படுத்தும் குரல் பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்கள், குரல் பதிவுகள் மற்றும் இலட்சக் கணக்கான புகைப்படங்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ உள்பட, பல வீடியோ ஆதாரங்கள் சிக்கிய நிலையில் தான் நடிகர் திலீப்பை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், நடிகர் திலீப் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது உறவினர்கள் உள்ளிட்டவர்களின் கைபேசிகளில் அழிக்கப்பட்ட டேட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மொத்தம் 11,161 வீடியோக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், 22 ஆயிரம் ஆடியோக்கள் மற்றும் 2 இலட்சம் புகைப்படங்கள் என ஒரு பெரிய டேட்டாவே அழிக்கப்பட்டு இருந்த நிலையில், பொலிஸார் அதனை ரிகவர் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான பல ஆதாரங்கள் அதில் இருப்பதாக கூறப்படுகின்றன.
எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் மொத்த ஆதாரங்களையும் டிரையல் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகள் மேலும், 3 மாத கால அவகாசத்தை கேட்டுள்ளனர். 6,682 வீடியோக்கள், 10,879 குரல் பதிவுகள் மற்றும் 65,384 புகைப்படங்களை சோதிக்க வேண்டி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.