இரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

ஆசிரியர் - Editor
இரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி..

இரணைதீவில் தாமாகவே சென்று தங்கியுள்ள மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை சென்று சந்தித்துள்ளனர்.

இதன் போது அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்துரையாடியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மக்களுக்கு ஒரு தொகுதி உணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.

மேலும் அக் கட்சியின் தூயகரங்கள் தூயநகரம் செயற்றிட்டத்தின் கீழ் அந்தப் பிரதேசத்தில்  சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டுருந்தனர்.

இந்த விஐயத்தின் போது அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.