SuperTopAds

பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் வரை திருமணம் செய்யமாட்டேன்!! -வைரலான ரசிகையின் பதாகை-

ஆசிரியர் - Editor II
பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் வரை திருமணம் செய்யமாட்டேன்!! -வைரலான ரசிகையின் பதாகை-

ஐ.பி.எல் ரி-20 தொடரில் ஆரம்பித்தில் இருந்து விளையாடிவரும் பெங்களூர் அணி ஒரு முறை கூட வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றாத நிலையில் அந்த அணி கிண்ணத்தை வெல்லும் வரை திருமணம் செய்யமாட்டேன் என்ற பதாகையுடன் இருந்த ரசிகை ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. 

ஐ.பி.எல் ரி-20 தொடரின் நேற்று நடந்த 22 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. இப் போட்டியில் பெங்களூரு அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது மைதானத்தில் பெங்களூரு ரசிகை ஒருவர் கையில் வைத்திருந்த பதாகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ரசிகை வைத்திருந்த பதாகையில் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி கோப்பை வெல்லும் வரை தான் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என எழுதப்பட்டு இருந்தது.

இது வரை 14 ஐ.பி.எல் சீசனில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரு முறை கூட வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.