வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் முழு தடை!! -ஒஸ்கார் குழு அதிரடி தீர்மானம்-
ஒஸ்கார் விருது விழா மற்றும் பிற ஒஸ்கார் தொடர்பான பிற நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
94 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்கள் முன் நடந்த போது, இந்த விழாவை தொகுத்து வழங்கிய நகைசுவை நடிகர் கிறிஸ் ராக், பிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து உருவக் கேலியாக பேசினார்.
எனினும், ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டு கிறிஸ் ராக் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த நடிகர் வில் ஸ்மித், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடை ஏறி அவரை கன்னத்தில் அறைந்தார். ஒரு சில நிமிடங்களில் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. உலகம் முழுவதும் இது பேசுபொருளானது.
இந்த விவகாரத்தில் தான் நடிகர் வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள 10 ஆண்டுகள் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.