சமையல் எரிவாயு பெறுவதற்கு காத்திருந்த மக்கள்! கையிருப்பு முடிந்துவிட்டதாக விநியோகஸ்த்தர் கூறியதால் ஏ-9 வீதியை முடக்கிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
சமையல் எரிவாயு பெறுவதற்கு காத்திருந்த மக்கள்! கையிருப்பு முடிந்துவிட்டதாக விநியோகஸ்த்தர் கூறியதால் ஏ-9 வீதியை முடக்கிய மக்கள்..

சமையல் எரிவாயு சிலின்டர் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் எரிவாயு சிலின்டர் முடிந்துவிட்டதாக விநியோகஸ்த்தர்கள் கூறியதால் கோபமடைந்த மக்கள் ஏ-9 வீதியை மூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 

குறித்த சம்பவம் வவுனியா - பூநாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலிருந்து எரிவாயு சிலிண்டர்கள் மாவட்டம் முழுவதும் விநியோகிப்படுவதுடன் 

தற்போது எரிவாயு தட்டுப்பாட்டையடுத்து குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில் குறித்த விநியோக இடத்தில் நேற்று (08) காலை வரிசையில் மக்கள் காத்திருந்தபோதிலும் 

9.30 மணியளவில் எரிவாயு நிறைவடைந்துள்ளமையினால் இன்று (08.04) விநியோகிக்கப்படமாட்டது என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியில் சிலிண்டர்களை வைத்து போராட்டம் நடத்தினர்.

இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்ததுடன் குறித்த இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடி மக்களை வெளியேற்றினர்.

இதனையடுத்து 20 நிமிடங்களின் பின்னர் ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் அவ்விடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு