SuperTopAds

நாடாளுமன்றத்திற்குள் ஒலித்த 'Go Home Gota'..!

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றத்திற்குள் ஒலித்த 'Go Home Gota'..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலகுமாறுகோரி நாடாளுமன்றத்திற்குள் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 

அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டாரவுக்கும் 

இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து பாராளுமன்றம் இன்று (06) 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உரையாற்றும் போது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ன்டோ குறுக்கிட்டு பதிலளித்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் 

என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபைக்கு அறிவித்தார்.

அவரது பதில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வாக்குவாதத்தை விளைவித்தது, பல ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் 

தற்போது ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றம் மீண்டும் 

ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.