உடன் அமுலுக்கு வரும்வகையில் 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்..!
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்று மற்றும் கொழும்பு மத்தி, நுகேகொட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட
பல எதிர்ப்பாளர்கள் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.