கேன் வில்லியம்சனுக்கு 12 இலட்சம் அபராதம்!!
ஜ.பி.எல் தொடரில் விளையாடிவரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதாக ஐதராபாத் அணித் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
ஐ.பி.எல் ரி-20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் அணி மோதியது. இதில் ராஜஸ்தான் அணி 210 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 55 ஓட்டங்களை பெற்றார். இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 149 ஓட்டங்களை எடுத்தது. இதனால் 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐதராபாத் தரப்பில் மார்க்ராம் 57 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 40 ஓட்டங்களும் எடுத்திருந்தனர். இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.