ஒஸ்கார் விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்!!
ஒஸ்கார் விருது வென்ற ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் நிகழ்ச்சி தொகுப்பாளரின் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
அமெரிக்கா நாட்டின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 ஆவது ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுக்கு வந்திருந்தார்.
இதன் போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹொலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பின் அவர் தனது இருக்கைக்குத் திரும்பி, “என் மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து விலக்கிவிடு" சத்தமிட்டார். வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை தனது மனைவியை கேலி செய்ததற்காக மேடையில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒஸ்கர் விருது கிடைத்ததும் அப்படி நடந்து கொண்டதற்கு மன்னிப்பையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஒஸ்கர் விழா மேடையில் வன்முறை நடப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.