பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட 2 உழவு இயந்திரங்கள் மின்வெட்டு நேரத்தில் காணாமல்போய்விட்டதாம்! மண்டையை சொறியும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட 2 உழவு இயந்திரங்கள் மின்வெட்டு நேரத்தில் காணாமல்போய்விட்டதாம்! மண்டையை சொறியும் பொலிஸார்..

மணல் கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரு உழவு இயந்திரங்கள் காணாமல்போயுள்ளன. 

முல்லைத்தீவு - பறங்கி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல்காரர்களினால் மணல் அகழப்பட்ட நிலையில் கடந்த 25ம் திகதி இரு உழவு இயந்திரங்களை பொலிஸார் மீட்டனர். 

குறித்த இரு உழவு இயந்திரங்களும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினமே மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் உழவு இயந்திரங்கள் காணாமல்போயுள்ளதாம். 

இது தொடர்பில் ஊடகங்கள் வினவியபோது “தவறொன்று நடந்துள்ளது“ என நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளாரம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு