SuperTopAds

மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கையில் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது! பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் ஐனாதிபதிக்கு உருக்கமான கடிதம்..

ஆசிரியர் - Editor I
மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கையில் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது! பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் ஐனாதிபதிக்கு உருக்கமான கடிதம்..

நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கையில் வெறுமனே என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. என நிமல் லான்சா தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு உயரிய சேவைகளை வழங்கவும் தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியை வழங்கிய 

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நிமல் லான்சா தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.