பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு!! -கொண்டாடும் தளபதி ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு!! -கொண்டாடும் தளபதி ரசிகர்கள்-

தளபதி விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகிறது என்று பிரபல நடிகர் ஒருவர் தனது வலைத்தளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். 

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வியாழக்கிழமை வெளியாகிறது என்று அப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தளபதியின் ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்பை கூட்டியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு