உக்ரைன் - டொனெட்ஸ்க் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்!! -23 பேர் பலி: 28 பேர் காயம்-
உக்ரை நாட்டில் ரஷ்ய படைகளின் ஆதரவு கிளர்ச்சிக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதி மீது உக்ரேனிய படை மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், அச் சம்பவத்தில் 28 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் இத்தாக்குதல் குறித்த குற்றச்சாட்டை உக்ரைன் அரசாங்கம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள டொனெட்ஸ்க் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் 2014 இல் இருந்து உக்ரேனிய படைகளுக்கு எதிராக சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியை தன்னாட்சி பகுதியாக அங்கீகரிப்பது, உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவதற்காக ரஷ்ய ஜனாதிதி விளாடிமிர் புடினின் கோரிக்கைகளுள் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.