உக்ரைனுக்கு சிறப்பு இராணுவ உபகரணங்கள்!! -அனுப்புகிறது கனடா-
உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ரஷியா மீதான பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து செலன்ஸ்கியிடம் ஆலோசித்ததாக ஜஸ்டின் ட்ரூடோ கூறி உள்ளார்.
உக்ரைனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இராணுவ உபகரணங்களின் மற்றொரு தொகுப்பு அனுப்பப்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார். மேலும் கனடாவின் பாராளுமன்றத்தில் உரையாற்ற ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.