பெண் தலைமைத்துவ குடும்பம் தம் வாழ்வாதாரத்திற்காக வளர்த்த கோழிகளை திருடி மாட்டிக்கொண்ட ஊரில் பொிய மனுசன்..!

ஆசிரியர் - Editor I
பெண் தலைமைத்துவ குடும்பம் தம் வாழ்வாதாரத்திற்காக வளர்த்த கோழிகளை திருடி மாட்டிக்கொண்ட ஊரில் பொிய மனுசன்..!

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்திற்காக வளர்த்த 15 கோழிகள் திருடப்பட்ட நிலையில், அவற்றில் இரு கோழிகள் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - இந்துபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று தமது வாழ்வாதாரத்திற்காக கோழி வளர்த்த நிலையில், 

15 கோழிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போயுள்ளது. இதனையடுத்து குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் அவதானித்த கிராமத்தவர்கள் அந்த ஊர் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டில் 

கோழிகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அந்த வீட்டிற்கு சென்று தனது கோழிகள் இரண்டையும் அடையாளம்காட்டி வாங்கிக் கொண்டுவந்துள்ளார். 

பின்னர் அந்த கோழிகளுடன் இந்துபுரம் பொலிஸ் காவலரணிற்கு சென்ற பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்ததுடன், பொலிசார் சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு களவாடப்பட்ட எஞ்சிய கோழிகளை மீட்டுத்தர வேண்டும் எனவும், குற்றவாளியை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 74 வயதான குறித்த தாயார் கோழி வளர்ப்பில் தமது குடும்ப வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றார். 

இந்த நிலையில் குறித்த தாயாரின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டிய முக்கியம் வாய்ந்த கமக்கார அமைப்பின் பொருளாளரின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு