SuperTopAds

ரஷ்யாவுக்கு இனி எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது!! -ஜப்பான் அரசு அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
ரஷ்யாவுக்கு இனி எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது!! -ஜப்பான் அரசு அதிரடி அறிவிப்பு-

ரஷ்யாவுக்கு இனிவரும் காலங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது என்று ஜப்பான் அரசாங்கம் அதிரடி அறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே ரஷ்யா மீது ஜப்பான் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தங்கள் நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் இனிவரும் காலங்களில் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலியாவிலுள்ள ஆம்போல் மற்றும் விவா எனர்ஜி ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.