SuperTopAds

மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு!!

ஆசிரியர் - Editor II
மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு!!

அமெரிக்கான் நியூயார்க்கில் உள்ள சில மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் போன்ற அம்சங்கள் வெள்ளை நிற மான்களில் இருப்பதால், மனிதர்களிடம் இருந்து அவற்றுக்கு பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.

அமெரிக்காவில், அயோவா மாகாணத்தில் வாழும் மான்களை வைத்து அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தினர். அவற்றை ஆய்வு செய்தபோது, 19 மான்களில் கொரோனாவால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்ட 68 மான்களில் 7 மான்களின் மூக்கில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மான்களின் மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, வெள்ளை நிற மான்கள் சிலவற்றில் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாதிரி எடுக்கப்பட்ட வெள்ளை நிற மான்களில் 80 சதவீத விலங்குகளில் ஒமைக்ரான் இருந்துள்ளது.

இந்த மான்கள் நியூயார்க்கில் ஸ்டேடன் தீவில் வாழ்ந்து வருகின்றன. சுதந்திரமாக வாழ்ந்து வரும் உயிரினங்களில் ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்டது, இதுவே முதல்முறை ஆகும்.