விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா!!! -வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்-

ஆசிரியர் - Editor II
விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா!!! -வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்-

தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மட்டத்தின் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

ஐக்கிய  அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னால் விஜய் சேதுபதி துபாயில் கணக்காளராக பணிபுரிந்தார். தற்போது 2022 இல் கோல்டன் விசா வாங்கும் அளவிற்கு வளரச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு