நிதி அமைச்சர் தீய நோக்கத்துடன் நிலைமையை மோசமாக்க முயற்சிக்கிறாரா? பஸில் - வீரவங்ஸ இடையில் முறுகல்..

ஆசிரியர் - Editor I
நிதி அமைச்சர் தீய நோக்கத்துடன் நிலைமையை மோசமாக்க முயற்சிக்கிறாரா? பஸில் - வீரவங்ஸ இடையில் முறுகல்..

நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விதம் குறித்து அமைச்சர் விமல்வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் நிதியமைச்சர் மத்தியவங்கி ஆளுநருடன் கடந்த ஆறு மாதங்களாக நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை. என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் தான் நிதியமைச்சிற்கு ஒன்பது முறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் எனினும் எந்த பதிலும் இல்லை என தெரிவித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய வங்கி ஆளுநர் பல யோசனைகளை முன்வைத்த போதிலும் எந்த பதிலும் இல்லை என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச 

முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய தருணத்தில் நிதியமைச்சர் வெளிநாடுகளிடம் நிதிபெறுவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காக குழுக்களை அமைத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். 

தீயநோக்கத்துடன் நிலைமை மோசமாவதற்கு நிதியமைச்சு அனுமதிக்கின்றது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு