SuperTopAds

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கமாட்டோம்!! -சீனா அரசு அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கமாட்டோம்!! -சீனா அரசு அதிரடி அறிவிப்பு-

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடடுத்தமைக்காக ரஷ்யா மீது பொருளாதார ரீதியான தடைகளை விதிக்கப் போவதில்லை என்று சீனா அரசாங்கம் அதிடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

உக்ரைன் நகரங்களை ரஷ்யா கைப்பற்ற ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் அந்நாட்டின் பண மதிப்பு 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குச்சந்தைகள் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளன. ஏற்கனவே விலைவாசி பிரச்னையில் சிக்கி தவிக்கும் ரஷ்யாவுக்கு பணமதிப்பு இழப்பு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ரஷ்ய விமானங்களின் போக்குவரத்தையும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற முக்கிய நாடுகள் தடை செய்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்காத நாடுகளில் இந்தியா, சீனா போன்றவை உள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்காத ஒரே பெரிய நாடு சீனா தான். இப்பிரச்னை இரு நாடுகள் சம்பந்தப்பட்டவை என கூறி விலகியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் வங்கி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் குவோ {கிங் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை எதிர்ப்பதாக கூறியுள்ளார். அவை சட்ட அடிப்படையிலானவை அல்ல என்கிறார். சீனா அத்தகைய தடையை விதிக்காது என்றும், பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி சார்ந்த உறவுகள் தொடரும் என்றார்.