முன்னேறும் ரஷிய படைகளை தடுக்க வீதியில் இறங்கி பொதுமக்கள்!! -கீவ் நகரில் தொடர்ந்து பதற்றம்-

ஆசிரியர் - Editor II
முன்னேறும் ரஷிய படைகளை தடுக்க வீதியில் இறங்கி பொதுமக்கள்!! -கீவ் நகரில் தொடர்ந்து பதற்றம்-

மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொளவ்தற்காக மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக நடந்தே செல்லவேண்டிய நிலை உள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையே இன்று புதன்கிழமை 7 ஆவது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை முழுமையாக கைப்பற்றுவதற்காக ரஷிய படைகள் முன்னேறி வருகின்றனர். 

இதேபோல் அந்நாட்டின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ் மீதும் தீவிர தாக்குதலை ரஷியா ஆரம்பித்துள்ளது. இருப்பினும் ரஷிய படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படையினர் சண்டையிட்டு வருகின்றனர். 

உயிர் தப்புவதற்காக உக்ரைன் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மாணவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொளவ்தற்காக மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக நடந்தே செல்லவேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், தலைநகர் கீவை முழுமையாக கைப்பற்றும் வகையில் ரஷிய படைகள் இன்று புதன்கிழமை முன்னேறத் தொடங்கினர். மேலும், ரஷிய படையினர் ஸபோரிஷ்யா அணுமின் நிலையத்தை கைப்பற்றப்போவதாக தகவல் வெளியானது. 

எனவே, அவர்கள் முன்னேறாமல் தடுப்பதற்காக, சேதமடைந்த ரஷிய வாகனங்களை சாலையின் நடுவே வைத்து பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். அணுமின் நிலைய ஊழியர்கள் சாலைகளில் திரண்டுள்ளனர்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு