ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை!! -கனடா பிரதமர் அதிரடி முடிவு-
ரஷ்யா நாட்டில் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு முழுமையான தடை விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அறிவித்துள்ளாதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெயியிட்டுள்ளது.
அவர் வெளியிட்ட அறிக்கையில் மேற்படி தடை தொடர்பில் தெரிவித்திருப்பதாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இலாபம் அடையக் கூடும். அதனால் ரஷ்யாவும் பலன் அடையும். ஆகையால் சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் யுக்ரைனுக்கு ஆதரவாக டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை அனுப்பவுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதென அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.