“கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்” செயற்திட்டக் கலந்துரையாடல் யாழில்..
“கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்” என்னும் தொனிப்பொருளில் பிரதேசசபை பெண் பிரதிநிதிகளில் தலைமைத்துவம் பண்பினை வளர்க்கும் செயற்திட்டக் கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
பிரச்சினைகளை இனங்காண்பது மாற்றத்தை கொண்டுவருவதற்கான பெண்களின் தலைமைத்துவப் பயிற்சி வழங்குதல் குறித்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல்
உள்ளூராட்சிமன்றப் பெண் உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து
தமது பிரதேசத்துக்கான மக்கள் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்தது அது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவன், சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் சிவகங்கை இராமநாதன்,
வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.தர்சன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளம், யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்பு
மற்றும் search for common ground ஆகியன இணைந்து குறித்த செயற்திட்டத்தினை மேற்கொண்டது.