வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தகூடாது! ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை..

வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் ஆட்சி மக்களின் சுதந்திரம் மற்றும் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் ஜனநாயக ஒழுக்கிலிருந்து விலகப்போவதில்லை.
ஆனால் அதன் ஊடாக கிடைக்கும் சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்தகூடாது. ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி ரண்பிம காண உறுதி கையளிக்கும் நிகழ்வு நேற்று எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.