ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையின் சூத்திரதாரி பிரிட்டனில் கைது..!
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரிட்டனில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
முன்னர் இலங்கையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பி;ல் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக மேலதிக தகவல்களை வழங்குமாறு
பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸின் யுத்த குற்றபிரிவினர் கோரிவந்தனர். செவ்வாய்கிழமை நோர்த்ஹாம்டன்சயரில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
என மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சர்வதேகுற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001இன் 51 வது பிரிவின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைதுசெயயப்பட்டார்.
பின்னர் விசாரணையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.2000ம் ஆண்டு பத்திரிகையாளர் நிமலராஜன் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே இந்த கைதுஇடம்பெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிமலராஜன் குடும்பத்தினருக்கு இதனை தெரியப்படுத்தியுள்ள அதிகாரிகள் விசேட அதிகாரிகள் அவர்களிற்கு ஆதரவு வழங்கின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைகள் தொடர்கின்றன, இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை வழங்குபவர்கள் எவரிடத்திலிருந்தும்
குறிப்பாக லண்டனிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களிடமிருந்து விடயங்களை செவிமடுக்க தயாராக உள்ளோம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.