ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்!! -பதிலடி கொடுப்போம் உக்ரைன் ஜனாதிபதி அதிரடி-

ஆசிரியர் - Editor II
ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்!! -பதிலடி கொடுப்போம் உக்ரைன் ஜனாதிபதி அதிரடி-

ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியா இன்று அதிகாலையில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி, தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தப்பட்டு வருகிறது. கிழக்கு உக்ரை முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி ரஷிய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் உக்ரைன் படைகள் பின்வாங்காமல் பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளன. 

ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தி (ஹெலிகாப்டரை) சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேலும் ரஷியா உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு