SuperTopAds

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்குள் புகுந்து உழவு இயந்திரத்தில் பொருட்களை திருடி சென்ற கும்பல்! வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கும் தொடர்பா?

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்குள் புகுந்து உழவு இயந்திரத்தில் பொருட்களை திருடி சென்ற கும்பல்! வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கும் தொடர்பா?

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்ட பல லட்சம் ருபாய்கள் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேல் மாடி கட்டிட வேலைக்காக வைக்கப்பட்ட பொருட்களே இரவோடிரவாக திருடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் இரவு நேரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் இருந்த நிலையில் வைத்தியசாலையின் பின்புற வாயிலால் உழவு இயந்திரம் மூலம் 

பொருட்கள் ஏற்றப்பட்டு முன்பக்க வாயில் வழியாக வெளியே எடுத்த செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு 

தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைத்தது.எனினும் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு 

வடமாகாண சுகாதார அமைச்சு அசமந்தப் போக்கில் செயல்படுவதாக ஒப்பந்த நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.