வடகிழக்கில் தமிழுக்கும், தமிழர் கலை பண்பாட்டுக்கும் அளப்பரிய பணியாற்றிய பல்துறை சார்ந்தோரையும் கௌரவிக்கும் முயற்சி!

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் தமிழுக்கும், தமிழர் கலை பண்பாட்டுக்கும் அளப்பரிய பணியாற்றிய பல்துறை சார்ந்தோரையும் கௌரவிக்கும் முயற்சி!

வடகிழக்கு மண்ணில் எமது மக்களுக்கும் எமது மொழிக்கும் பெருமையும் மதிப்பும் கௌரவமும் தேடித்தரும் வகையில் கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் அரும்பணி ஆற்றியவர்களை சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்தும் வகையிலும்,

மதிக்கும் வகையிலும் அதி சிறப்பு வாய்ந்த விருதுகளையும் கௌரவத்தையும் வழங்கி மதிப்பளிக்கும் உயரிய நோக்கத்துடனும் பெரு விருப்புடனும் வென்மேரி அறக்கட்டளை தனது இலட்சிய பணியை ஆரம்பித்துள்ளது என மேற்படி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் அருளப்பு வென்சிலாஸ் அனுரா கூறினார்.  

வென்மேரி அறக்கட்டளை நிறுவனம் கடந்த மாதம் யாழ்பாணத்தில் சம்பிரதாய பூர்வமாக அங்குராப்பணம் செய்யப்பட்டதுடன் அதன் செயலகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை ஒரு நீண்ட கால திட்டத்தின் பேரிலும் தகுதி வாய்ந்த ஆலோசகர்களின் சிந்தனையின் அடிப்படையிலும் 

மேற்படி புலமையாளரை ஆளுமையாளரை இனம் கண்டு ஆண்டு கௌரவிக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து கடந்த வாரம் யாழ் ஊடக மையத்தில் இணைய வழி கலந்துரையாடல் மூலம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது திரு வென்சிலாஸ் அனுரா மேலும் தெரிவிக்கையில் 

எதிர் வரும் ஆவணி மாதம் முதலாவது விருது வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்றும் இதன் போது பல்வேறு துறைகளிலும் கடந்த காலங்களில் எமது மொழிக்கும் இனத்திற்கும் அரும்பணி ஆற்றி மறைந்த மாமனிதர்களின் பெயர்களில் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்படும் என்றும் இவ் விருதுகள் 

தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் மரியாதைக்குரிய விருதாக கருதும் வகையில் வழங்கப்படும் என்று விவரித்ததுடன் இது தொடர்பாக எதிர் வரும் வாரங்களில் மக்களுக்கு முழுமையான விபரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்ததுடன் இந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டில் மக்களும் ஊடகங்களும் தமக்கு பல்வேறு வகையிலும் ஆலோசனைகளும் 

கருத்துக்களும் தகமையானோர் பற்றிய தகவல்களும் வழங்கி உதவுவதன் மூலம் இந்த விருது வழங்கும் பணி சிறப்புற உதவவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். மேற்குறிப்பிட்ட விருது வழங்கும் திட்டமானது திறமை, தகைமை, ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் 

இதில் எந்த வித தனிநபர் செல்வாக்கிற்கும் இடம் இல்லை எனவும் உறுதி படுத்திய அவர் எமது இனத்தையும் மொழியையும் பொறுத்தமட்டில் இது ஒரு காலத் தேவையாக கருதப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது எனவும் விவரித்தார். இவ் இணைய வழி உரையாடலின்போது 

ஊடகவியலாளர்களின் சந்தேகங்களுக்கு அவர் தெளிவான விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வென்மேரி அறக்கட்டளை நிறுவனமானது அமரர்களான வென்சிலாஸ் மேரியம்மா ஆகியோரின் ஞாபகமாக அவர்களின் பிள்ளைகளால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு